Category Archives: தேர்தல் 2016

விபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , | 1 Comment

போட்டியிட சீட் கிடைக்குமா? குழப்பத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்த இடத்திலிருந்த நத்தம் விசுவநாதன் அதிமுக தலைமையினால் ஓரங்கட்டபட்டுவருகிறார். ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் சென்னையிலேயே இருந்தார். ஆனால் நத்தம் தொகுதிக்கு நடந்த நேர்காணலுக்கு இவர் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நேர்காணிலில் நத்தம் தொகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதனை தவிர்த்து … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி! கூட்டணி நீடிக்குமா?

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி எப்போதும் இருந்து வருகிறது. அதே போல இன்னொரு கட்சியான மனிதநேய மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக  3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி இம்முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே திமுகவில் முஸ்லீம் லீக் கட்சிக்கும், மமகவிற்கும் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

முஸ்லீம் லீக் கட்சி 5 இடங்களில் ஏணி சின்னத்தில் போட்டி!

முஸ்லிம் லீக் கட்சி இதுவரை திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே போல் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. இதனால் அக்கட்சி தொடர் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் முஸ்லீக் கட்சியின் தனிச்சின்னமான ஏணி சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பேரா. காதர் மொய்தீன் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

விடுதலை சிறுத்தைக் கட்சிக்கு மோதிரம் சின்னம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த 2004, 2006, 2011 ஆகிய தேர்தல்களில் அம்பு சின்னம், இரட்டை மெழுகுவர்த்தி ஆகிய சின்னங்களில் போட்டியிட்டது. மேலும் கடந்த மக்களைவைத் தேர்தலில் மோதிரம் சின்னத்த்தில் போட்டியிட்டது. இந்நிலையில், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் விசிகவிற்கு மோதிரம் சின்னத்தையே அளித்துள்ளது.

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , , | Leave a comment

திமுக, அதிமுக வை அகற்றுவோம்: நல்லகண்ணு

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் , தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தொடர்ந்து ஊழல்களையே செய்து வருகிறது. தற்போது ஆட்சியிலுள்ள அதிமுக அரசை அகற்றுவோம். அதிமுக ஆட்சியில் மணல்கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஆணவக் கொலைகள், வியசாயிகள் தற்கொலை, அதிகாரிகள் கொலைகள் என சட்டம் ஒழுங்கும், குற்றமும், அவலமும் நிறைந்துள்ளது. இதை மாற்றவேண்டும். … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

அதிமுகவில் மீண்டும் ஐக்கியமானார் சரத்குமார்!

சமத்துவ மக்கள் சட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியிலிருந்த தான் விலகுவதாக அறிவித்திருந்தார் . பின்பு திடீரென பாஜகவுடன் இணைந்தார். விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துவிட்டதால் பாஜக தனிமைப்படுத்தப்பட்டதால் உடனே சென்று ஜெயலலிதாவை இன்று சந்தித்த சரத்குமார் அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டதாகவும் சில நல்ல உள்ளங்கள் அதிமுகவையும், சமகவையும் இணைத்துள்ளதாகவும் இந்த சட்டமன்றத் … Continue reading

Posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , | Leave a comment