Monthly Archives: October 2015

‘மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு! – கோவன் கைது தலைவர்கள் கண்டனம்

மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டார். கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) … Continue reading

Posted in செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது – விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.  கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது: மத ரீதியான வெறுப்புணர்வை வளர்த்து, மக்களை பிளவு படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சகிப்புத்தன்மைக்கு எதிரான இந்த நிகழ்வுகள் … Continue reading

Posted in அறிவியல், இந்தியா | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

வித்யா தேவி பண்டாரி- நேபாளத்தின் முதல் பெண் அதிபர்!

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) துணைத் தலைவரான வித்யா தேவி பண்டாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குல் பகதூர் குருங்கை விட 113 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றி பெற் றார். வித்யா தேவி பண்டாரி 327 வாக்குகளும், குல் பகதூர் குருங் 214 வாக்குகளும் பெற்றார். நேபாள … Continue reading

Posted in உலக ச் செய்தி, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , | Leave a comment

இந்த ஆண்டு150 புது ரக பட்டாசுகள் அறிமுகம் – தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில் சென்னை பாரீஸ் ஆன்டர்சன் தெரு, பந்தர் தெரு ஆகியவற்றில் உள்ள பட்டாசு மொத்த விற்பனையகங்கள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 500 வகை பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 150 ரகங்கள் புது வரவாக உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு … Continue reading

Posted in சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக மூத்த விஞ்ஞானி அறிவிப்பு – நாட்டின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் என பேட்டி

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே பி.எம்.பார்கவா தனது பத்மபூஷண் விருதை திருப்பியளிப்பதாக அறிவித்திருக்கிறார். பி.எம்.பார்கவா இந்தியாவின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமாவார். அவரது பேட்டியில், “நாட்டில் தற்போது நிலவும் சூழல் … Continue reading

Posted in அறிவியல், இந்தியா, செய்திகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

கேரள பவனில் மாட்டிறைச்சி சோதனை! – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கண்டனம்

டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி சோதனை மேற்கொண்டதற்காக, டெல்லி காவல்துறையை மனிதநேய மக்கள் கட்சி கண்டித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா  வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் உள்ள கேரள பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாகக் கூறிய சில நபர்களுடன் டெல்லி போலீசார் கேரள பவனுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் … Continue reading

Posted in இந்தியா, சென்னை, செய்திகள், தமிழ்நாடு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

தேசிய விருது பெற்ற முக்கிய 10 சினிமா படைப்பாளிகள் விருதை திருப்பி அளிக்க முடிவு! – கருத்துரிமையை நிலைநாட்டக் கோரி..

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது 136 நாள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தாலும், கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்று அறிவித்த நிலையில், சினிமா படைப்பாளிகளின் இந்தப் புதிய முடிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. … Continue reading

Posted in இந்தியா, சினிமா | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

யார் அந்த கீதா? – பாகிஸ்தானின் வளர்ப்பு மகள்!

இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 8 வயதாக இருக்கும் போது, தவறுதலாக பாகிஸ்தானுக் குள் சென்று, லாகூர் ரயில் நிலை யத்தில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்தார். அவரை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர்.பாகிஸ்தானிலுள்ள எதி அறக்கட்டளை சிறுமியை பாதுகாத்து வளர்த்தது. வாய் பேச முடியாத, காது கேட்காத அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் … Continue reading

Posted in இந்தியா | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

வைரஸ் காய்ச்சலைப் போக்கும் மூலிகைச் சாறுகள்! – தயாரிக்கும் முறைகள்

டெங்கு காய்ச்சலைப் போக்குவது எப்படி? Continue reading

Posted in மருத்துவம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment

இலங்கையில் இரண்டு இந்துக் கோயில்கள் இடிப்பு! – எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அமைப்புகள்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளது. குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் … Continue reading

Posted in உலக ச் செய்தி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Leave a comment