விபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்!

thiruma save pmk mensவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மேல் மோதிவிட்டுச் சென்றிருந்தது. அருகில் இருந்தவர்கள் திருமாவிடம், ” 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒருமணி நேரம் ஆகிறது. இன்னும் வேன் வரவில்லை” எனச் சொல்ல,‪ கொந்தளித்த‬ திருமா, “

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருமணி நேரமாக அந்த மனிதர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். கால் சதை பிய்ந்துபோய்விட்டது. ரத்தப் போக்கு அதிகமாக இருக்கிறது. அந்தப் பெண்மணி தாங்க முடியாத வேதனையில் கத்திக் கொண்டிருக்கிறார். தள்ளி நில்லுங்கள்” என திட்டி கொண்டே, தனது வாகனத்தடிபட்டவர்களை ஏற்றினார்.

‘அவர்கள் பா.ம.க கரைவேட்டி கட்டியிருக்கிறார்கள்’ என கட்சித் தொண்டர் ஒருவர் சொல்ல, ” இருந்துட்டுப் போகட்டும். அவர்கள் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். இப்போது இதுதான் முக்கியமா? உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொல்” எனக் கோபத்தில் கத்தினார் திருமா.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.

விபத்து சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ” அடிபட்ட நபருக்கு கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும் கொடுமையான விபத்தாக இருந்தது. தலை, கை, காலில் பலத்த அடிபட்டிருந்தது. அந்தப் பெண்மணிக்கும் பலத்த காயம். போலீஸார், பொதுமக்கள் என அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. இது மிகவும் வேதனைப்பட வேண்டிய விஷயம். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போது அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கிறார்கள்” என்றார் நெகிழ்ச்சியோடு.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு  அவசர அவசரமாக பரக்கும் தலைவர்களிடையே திருமா வித்தியாசமானவர்தான். அவருடைய மனிதாபிமானம் பாராட்டத்தக்கது.

Advertisements
Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , | 1 Comment

பிகாரில் முழு மதுவிலக்கு: சொன்னதை செய்த நிதிஷ்!

கடந்த ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக லாலுவும், நிதிசும் ஒன்றாக இணைந்து பாஜகவை தோற்கடித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தனர். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் நிதிஷ் கொடுத்த வாக்குறுதி தான் பூரண மதுவிலக்கு. nitish

ஆட்சிக்‌கு வந்ததும் 2016 ஏப்ரல் முதல் பீகாரில் முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்படும் என்றார். இந்நிலையில் பீகாரில் மார்ச் 31 இரவு 12 மணியுடன் மது விற்பனை முடிவுக்கு வந்தது. ஏப்ரல் 1 முதல் தடை அமுலுக்கு வந்தது இதனால் ரூ. 3 கோடி மதிப்பிலான மது பாட்டில்கள் உடைத்து அழிக்கப்பட்டது. பிகாரில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிகார் மகிளா பிரிகேட் என்ற அமைப்பினர் இந்த தடையை ஆடிப்பாடியும், வண்ணங்களை வீசியும் கொண்டாடினர்.

அயல்நாட்டு மது வகைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை. பெருநகரங்களில் உள்ள அரசு விற்பனைக் கடைகளில் மட்டும் கிடைக்கும் இந்த வகை மதுவையும் இன்னும் 7 மாதங்களில் முற்றிலுமாக தடை செய்யப்போவதாக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். மேலும், நாட்டுச் சாராயம் கள்ளச் சாராயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது குடித்தால் 7 ஆண்டுகளும், வீட்டில் குடித்துவிட்டு பிறருக்கு தொல்லை தந்தால் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் கள்ளச்சாரயம் காய்ச்சினால் மரணதண்டனை வழங்க சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Posted in இந்தியா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , | Leave a comment

போட்டியிட சீட் கிடைக்குமா? குழப்பத்தில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு அடுத்த இடத்திலிருந்த நத்தம் விசுவநாதன் அதிமுக தலைமையினால் ஓரங்கட்டபட்டுவருகிறார். ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்பட வில்லை. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற எந்த கூட்டத்திலும் கலந்துகொள்ளாமல் சென்னையிலேயே இருந்தார்.

natham

நத்தம் விஸ்வநாதன்

ஆனால் நத்தம் தொகுதிக்கு நடந்த நேர்காணலுக்கு இவர் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த நேர்காணிலில் நத்தம் தொகுதிக்கு அமைச்சர் விஸ்வநாதனை தவிர்த்து ஒன்றிய செயலாளர் ஷாஜகான், சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமராஜ், சாணார்பட்டி ஒன்றியத் தலைவர் இன்பஜோதி ஆகியோர் அழைக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற தொகுதிகளாவது கிடைக்கும் என்றால் எந்த தொகுதியின் நேர்காணலுக்கும் அழைக்கப்படாததால் இந்த முறை நத்தம் விசுவநாதனுக்கு சீட் கிடைக்காது என்ற நிலை உள்ளது.

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , , | Leave a comment

எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி! கூட்டணி நீடிக்குமா?

திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சி எப்போதும் இருந்து வருகிறது. அதே போல இன்னொரு கட்சியான மனிதநேய மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியாக  3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வென்றது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி இம்முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. எனவே திமுகவில் முஸ்லீம் லீக் கட்சிக்கும், மமகவிற்கும் தலா 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.20130528_170420_1

கூட்டணியில் முதன்முறையாக இணைந்து போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சிக்கு 5 இடங்கள் வேண்டும் என்று அதன் தலைவர் தெஹ்லான் பாகவி ஸ்டாலினிடம் கேட்டுள்ளார். ஆனால் ஸ்டாலின் பெரிய கட்சிகளான மமக, முஸ்லீம் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த முறை ஒரு சீட் தான் தரமுடியும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனை அக்கட்சி தலைவர் ஏற்றுக் கொள்ளாததால் தொகுதி பங்கீட்டில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

எஸ்டிபிஐ கட்சி 3 தொகுதிகளாவது கேட்டுப்பெறுவது என்று முடிவெடுத்துள்ளது என்றும் அல்லது தனித்து போட்டியிடுவது அல்லது வேறு கூட்டணிக்கு முயற்சி செய்வார்கள் என தெரிகிறது.

Posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment

வெற்றிமாறனின் “விசாரணைக்கு” தேசிய விருது!

இயக்குனர் வெற்றிமாறன் லாக்கப் என்ற நாவலை மையமாக வைத்து விசாரணை என்ற சிறந்த படத்தை இயக்கினார். அது  தமிழக திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

தற்போது 63வது இந்திய திரைப்பட விருது பட்டியலில் தமிழ் படத்திற்கான விருதுகளில் வெற்றிமாறனின் விசாரணை படத்திற்கு தேசியவிருது கிடைத்துள்ளது. 375809-visaranai-stills

சமுத்திரக்கனிக்கு தேசிய விருது:

விசாரணைப்படத்தில் சிறந்த எடிட்டிங் செய்த கிஷோர் குமாருக்கு எடிட்டிங்குக்கான தேசிய விருதும், சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனிக்கும் கிடைத்துள்ளது.

Posted in சினிமா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | Leave a comment

இளையராஜாவின் 1000 மாவது படத்திற்கு தேசிய விருது!

இளையராஜா இசையமைத்த முதல் படமான அன்னக்கிளிக்கு தேசியவிருது கிடைத்தது.

1000 படங்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜாவிற்கு தனது ஆயிரமாவது படமான 63வது தேசிய திரைப்படவிருது அறிவிப்பில் தாரை தப்பட்டை படத்திற்கு சிறந்த பிண்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. download

Posted in சினிமா, செய்திகள், தமிழ்நாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , | Leave a comment

கடன் நெருக்கடியால் கர்நாடக விவசாயி தற்கொலை

150905

இந்தியாவில் விவசாயிகள் விவசாயக் கடன் கட்ட முடியாமல் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலை சமீபமாக அதிகரித்து வருகிறது.fl04_farmers_tab_e_2513571g

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா மாவட்டம் கோரலகுண்டா கிராமத்தைச் சார்ந்த விவசாயி சிறீகாந்த தனது தோட்டத்தில் 3 ஏக்கர் அளவில் தக்காளி பயிரிட்டிருந்தார். தனது ஊரிலுள்ளவர்களிடம் தனிநபர் கடனாக வட்டிக்கு ரூ. 2 இலட்சம் வாங்கியிருந்தார். பருவமழை பொய்த்துப் போனதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயிகள் மானத்திற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் கொடுக்க கேட்கும் ஆவணங்களின் பட்டியல் நீளமானது. ஆனால் மல்லையாக்கள் 7000 கோடிகளை வங்கிகளில் கடனாகப் பெற்றுக் கொண்டு அழகிகளுடன் வெளிநாட்டில் உல்லாசமாய் வலம் வருகின்றனர்.

Posted in இந்தியா, செய்திகள், Uncategorized | Tagged , , , , , , , | Leave a comment