விபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்!

thiruma save pmk mensவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று தொகுதிக்குள் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து கிளம்பினார். திருநாரையூர் என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு நபரும் அவருடைய மனைவியும் விபத்தில் சிக்கிப் போராடிக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு பதறிக் கொண்டிருந்தனர். அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மேல் மோதிவிட்டுச் சென்றிருந்தது. அருகில் இருந்தவர்கள் திருமாவிடம், ” 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒருமணி நேரம் ஆகிறது. இன்னும் வேன் வரவில்லை” எனச் சொல்ல,‪ கொந்தளித்த‬ திருமா, “

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருமணி நேரமாக அந்த மனிதர் வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். கால் சதை பிய்ந்துபோய்விட்டது. ரத்தப் போக்கு அதிகமாக இருக்கிறது. அந்தப் பெண்மணி தாங்க முடியாத வேதனையில் கத்திக் கொண்டிருக்கிறார். தள்ளி நில்லுங்கள்” என திட்டி கொண்டே, தனது வாகனத்தடிபட்டவர்களை ஏற்றினார்.

‘அவர்கள் பா.ம.க கரைவேட்டி கட்டியிருக்கிறார்கள்’ என கட்சித் தொண்டர் ஒருவர் சொல்ல, ” இருந்துட்டுப் போகட்டும். அவர்கள் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும். இப்போது இதுதான் முக்கியமா? உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு வண்டியை விடச் சொல்” எனக் கோபத்தில் கத்தினார் திருமா.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஒருவர், அருகில் இருந்து கவனித்துக் கொண்டார்.

விபத்து சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ” அடிபட்ட நபருக்கு கால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. மிகவும் கொடுமையான விபத்தாக இருந்தது. தலை, கை, காலில் பலத்த அடிபட்டிருந்தது. அந்தப் பெண்மணிக்கும் பலத்த காயம். போலீஸார், பொதுமக்கள் என அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர, உதவிக்கு யாரும் வரவில்லை. இது மிகவும் வேதனைப்பட வேண்டிய விஷயம். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். இப்போது அறுவை சிகிச்சை முடிந்து நன்றாக இருக்கிறார்கள்” என்றார் நெகிழ்ச்சியோடு.

தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கு  அவசர அவசரமாக பரக்கும் தலைவர்களிடையே திருமா வித்தியாசமானவர்தான். அவருடைய மனிதாபிமானம் பாராட்டத்தக்கது.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in அரசியல், செய்திகள், தேர்தல் 2016, Uncategorized and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to விபத்தில் சிக்கிய பாமகவினரை மீட்ட திருமாவளவன்!

  1. Nandini Sree says:

    சமூகம் திருந்தாது, தனிமனிதன் திருந்த வேண்டும்! http://manam.online/News/Social-Issues/2016-MAY-20/Campaign-to-Eradicate-Liquor-6

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s