பாஜகவை தனிமைப்படுத்திய தமிழக கட்சிகள்!

வரும் மே 16, 2016 நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தமிழக கட்சிகள் எதுவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. பாஜகவுடன் கூட்டணியாக சேர்ந்திடவும் ஆர்வம் காட்டவில்லை. காரணம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதனுடன் கூட்டணி வைத்ததன் காரணமாக மதிமுக,  பாமக, குறிப்பாக தேமுதிகவின் வாக்குகள் சதவீத அடிப்படையில் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே பாஜகவை தமிழகத்திலுள்ள பிற கட்சிகள் பாஜகவுடன் கைகோர்க்க தயங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tamilisai

தமிழிசை

மேலும் கடந்த இரு ஆண்டுகளில் பிரதமராக மோடி எதுவும் மக்களுக்காக செய்திட வில்லை என்றும் கார்ப்பரேட் ஆதரவு அரசாகத்தான் அது செயல்படுகிறது என்றும் பிற கட்சிகள் விமர்சித்து வருகிறது. பீகார் தேர்தலில் பாஜக அடைந்த படுதோல்வியை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள் பாஜகவுக்கு தற்போது இந்திய அளவில் செல்வாக்கு குறைந்துள்ளது. அதன் காரணமாகவும் பாஜகவுடன் யாரும் கூட்டணி சேர விரும்பவில்லை என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்திராராஜன், பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in அரசியல், செய்திகள், தமிழ்நாடு, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s