இடைக்கால பட்ஜெட் விவாதம் : எதிர்கட்சிகள் வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.

இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிநடப்பு செய்தன.

assembly17.02.16

வெளிநடப்பு செய்த மார்க்ஸிஸ்ட் உறுப்பினர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்க விரும்பினோம். ஆனால், அது குறித்து விரிவாக பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை. எனவே, இதனைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

திமுக உறுப்பினர் துரைமுருகன், பாமக உறுப்பினர் கணேஷ்குமார், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் இதே கருத்தை முன்வைத்தனர். அவையில், அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியேறுவதாகக் கூறினர்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in செய்திகள், தமிழ்நாடு and tagged , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: