கழிவறை கட்டாததால் மனைவியை பிரிந்து தவித்த கணவன்! கழிவறையை திறந்து வைக்க வந்த மனைவி!

திருமணம் முடிந்து கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் 19 மாதங்களாக கணவரை பிரிந்து இருந்த பெண் தற்போது, கழிவறை கட்டி முடிக்கப்பட்டதால் மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

சீமா பாட்டீல்

சீமா பாட்டீல்

மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டம், ஷாபூர் கிராமத்தை சேர்ந்த மோகன் பாட்டீலுக்கும், ஹோஷங்கபாத் மாவட்டம் இடராஸி கிராமத்தை சேர்ந்த சீமா  பாட்டீலுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எதிர்காலம் குறித்த வண்ணமயமான கனவுகளுடன் கணவர் வீட்டில் அடியெடுத்து வைத்த சீமா, வீட்டில் கழிவறை இல்லாதது கண்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார். இதனையடுத்து, கழிவறை கட்டும்படி தன் கணவரிடம் பலமுறை முறையிட்டுள்ளார்.

2 ஆண்டுகள் கடந்த பின்பும், கழிவறையை கட்டி முடிக்க கணவர் எந்த முயற்சியும் மேற்கொள்ளாததால் மனம் உடைந்த சீமா, கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் புகுந்த வீட்டில் இருந்து பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றார். குழந்தை பிறந்த பின்னும் அவர் கணவர் வீட்டிற்கு வரவில்லை. கழிவறை கட்டி முடிக்கும் வரை உங்கள் வீட்டிற்கு திரும்ப மாட்டேன் என்றும் கணவரிடம் உறுதியாக கூறிவிட்டார்.

கழிவறை இல்லாததால் கணவரின் வீட்டில் இருந்து வெளியேறிய சீமாவின் துணிச்சலை பலர் பாராட்டியதோடு, ஊடகங்களிலும் இதுகுறித்த செய்தி வெளியாகி, இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வீட்டில் கழிவறை இல்லாத காரணத்தால் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாத சீமாவின் கணவர், கழிவறை கட்டுவதற்கு ஷாபூர் கிராம பஞ்சாயத்து தலைவி மங்கிதா பாயின் உதவியை நாடினார். அவரும் உதவி செய்ய, வீட்டில் கழிவறை கட்டி முடித்தார்  சீமாவின் கணவர் மோகன். இதையடுத்து, கழிவறையை திறந்து வைப்பதற்காக சீமா தனது 19 மாத குழந்தையுடன் கடந்த 5-ம் தேதி கணவர் வீட்டுக்கு வந்தார். 19 மாதங்களுக்கு பிறகு தன் கணவர் குடும்பத்தில் இணைந்துள்ளார் சீமா.

இதனிடையே, பீடல் மாவட்ட ஆட்சியர் ஞானேஸ்வர் பாட்டீல், சீமாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, சுகாதாரம் மற்றும் துாய்மை விவகாரத்தில், சீமா எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in இந்தியா, செய்திகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s