‘மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு. ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு! – கோவன் கைது தலைவர்கள் கண்டனம்

மூடு டாஸ்மாக்கை மூடு’ என்ற பாடலைப் பாடிய மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த கோவன் கைது செய்யப்பட்டார்.

கோவன், மகஇக

கோவன், மகஇக

கோவன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 124-ஏ (தேச துரோகம்), 153-ஏ (சமூகத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல்), 505 (1) பி, சி (வதந்திகளை பிரசுரித்து, பரப்பி மக்களை அரசுக்கு எதிராக செயல்படும்படி தூண்டுவது) போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்

“கைது செய்யப்பட்ட கோவனை எங்கே அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்படவில்லை. அவரைச் சந்திக்கவும் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜனநாயகத்தின் குரல்வளை இந்த ஆட்சியில் நெரிக்கப்படுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை. கோவன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், கோவனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். – கலைஞர் கருணாநிதி, திமுக

“டாஸ்மாக்கை மூடவேண்டுமென்று விழிப்புணர்வு பாடல் பாடியதில் தேச துரோகமும், பிரிவினைவாதமும் எங்கிருந்து வருகிறது. இதுபோன்று மக்கள் விழிப்புணர்வுக்காகவும், நன்மைக்காகவும் செய்யப்படும் செயல்களை, அதிமுக அரசு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் முடக்காமல், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

தமிழக அரசுக்கு மதுவை விற்பதற்கு எப்படி உரிமை உள்ளதோ, அதுபோல மதுவை வேண்டாம் என்று சொல்வதற்கு தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. எனவே, கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை, இலக்கிய கழகத்தின் கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். – விஜயகாந்த், தேமுதிக.

தமிழ்நாட்டில் மதுவைக் கொடுத்து மக்களை சீரழிக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் வகையில் பாடல்களை இயற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பைச் சேர்ந்த கோவன் என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. – ராமராஸ், பாமக.

”டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் அதை நடத்தும் அரசு நிர்வாகத்தையும் எதிர்த்து பாடல் பாடியதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் கோவன் என்பவரை தமிழக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. – கனிமொழி, திமுக

மதுக்கடைகள் எண்ணிக்கை

மதுக்கடைகள் எண்ணிக்கை

“மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பாவலர் வரதராஜன் எப்படி பாடி நாட்டு மக்களை ஈர்த்தாரோ, அதற்கு சற்றும் குறையாமல் மக்கள் உணர்ச்சிகளை தூண்டுகிற வகையில் பொது பிரச்சினைகளை முன்வைத்து பாடல்களை இயற்றி, அவர் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழக மக்களிடையே பேரெழுச்சி ஏற்படுத்தியதை சகிக்க முடியாதவர்கள் ஆணையின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.தமிழ்நாட்டிலே தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதை உறுதி செய்கிற வகையில்தான் கிராமிய பாடகர் கோவன் கைது நிகழ்ந்துள்ளது. – இளங்கோவன், காங்கிரஸ்

மச்சி ஓபன் தி பாட்டில்’ என்று பாடினால் வரிவிலக்கு.
‘மூடு டாஸ்மாக்கை மூடு’ என்று பாடினால் கைவிலங்கு.
சாராயக் கடையை மூடச் சொல்வது தேசத் துரோகம் என்றால் ஊற்றிக்கொடுப்பதுதான் தேசபக்தியா? – எழுத்தாளர் பாரதி தம்பி .

“கோவன் கைது செய்யப்பட்டது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் செயல்” – ஏ.சரவணன்,  செய்தித் தொடர்பாளர், மகஇக.

“என் தந்தையின் கைது மக்கள் கலை, இலக்கிய கழகத்தை மிரட்டும் செயல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் மிரட்டும் செயல். இருப்பினும், மக்கள் கலை, இலக்கிய கழகம் தொடர்ந்து தனது பிரச்சாரங்களை மேற்கொள்ளும்” – கோவனின் மகன் சாருவாஹன்.

சமூக வலைதளங்களில்..!

கோவன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நூற்றுக்கணக்கான கண்டனப் பதிவுகளை நெட்டிசன்கள் பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நேற்று காலை தொடங்கி அவ்வப்போது #Kovan என்ற பெயர், ட்விட்டரில் தேச அளவில் ட்ரெண்டிங்கிலும் வலம் வந்தன.

கோவன் சாதீயம், இந்துத்துவம், ஊழல், கலவரங்கள், மது, தாமிரபரணி, காலனி ஆதிக்கம், ஏகாதிபத்தியம், அந்நிய முதலீடு போன்ற மக்கள் பிரச்சினைகளைப்பபற்றி நிறைய பாடல்களை தனது குழுவினருடன் பாடியுள்ளார்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in செய்திகள், தமிழ்நாடு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s