மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது அணுகுண்டை விட மிகவும் ஆபத்தானது – விஞ்ஞானிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!

சென்னை கணித அறிவியல் நிறுவனம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 130 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:

மத ரீதியான வெறுப்புணர்வை வளர்த்து, மக்களை பிளவு படுத்தும் சம்பவங்கள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளன. சகிப்புத்தன்மைக்கு எதிரான இந்த நிகழ்வுகள் காரணமாக அப்பாவி பொதுமக்களும் பகுத்தறிவாளர் களும் படுகொலை செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பன்முக கலாச்சார சிறப்பும், பெருமையும் கொண்ட நமது நாடு, இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக பின்னோக்கித் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஏராளமான சமூகங்கள், பழக்க வழக்கங்கள் இருந்தபோதிலும் அவற்றுக்கு உரிய இடமும் மதிப்பும் அளிக்கப் பட்டுள்ளது. இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மக்கள் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமையுடனும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரு கின்றனர். எல்லா தரப்பு மக்களின் நம்பிக்கைகளையும் கொண்டாடும் திருவிழாக்களும் பண்டிகைகளும் மக்களால் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

பல்வேறு வகைப்பட்ட மக்களின் சமூக, கலாச்சார இழைகள் பின்னிப் பிணைந்து உருவாக்கியுள்ள ஒற்றுமை உணர்வுதான், நமது நாட்டின் நாகரிக சிறப்புக்கு பெரும் வலிமையை தந்து கொண்டிருக்கிறது. இந்த பெருமைகளுக்கும், சிறப்புகளுக்கும் சில மதவெறியர்கள் மற்றும் அடிப்படைவாதிகளால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. மதரீதியாக பிளவுபட்ட ஒரு சமூகம் என்பது, அணுகுண்டை விடவும் நமது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது.

மாட்டிறைச்சி உண்பவர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்தச் சூழலில் எல்லோரது நம்பிக்கைக்கும் மதிப்பளித்து சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு நீங்கள் விடுத்த வேண்டுகோள் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு தாங்கள் மேலும் உரிய நடவடிக்கையைஎடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in அறிவியல், இந்தியா and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s