தேசிய விருது பெற்ற முக்கிய 10 சினிமா படைப்பாளிகள் விருதை திருப்பி அளிக்க முடிவு! – கருத்துரிமையை நிலைநாட்டக் கோரி..

தேசிய விருதுகள் திரும்ப ஒப்படைத்த படைப்பாளிகள்

தேசிய விருதுகள் திரும்ப ஒப்படைத்த படைப்பாளிகள்

புனே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது 136 நாள் வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்று, படிப்பைக் கருத்தில்கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்திருந்தாலும், கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதற்கு எதிரான தங்களது போராட்டமானது அமைதியான வெவ்வேறு வடிவங்களில் தொடரும் என்று அறிவித்த நிலையில், சினிமா படைப்பாளிகளின் இந்தப் புதிய முடிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புனே திரைப்படக் கல்லூரிமாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கும் விதமாக, முக்கிய சினிமா படைப்பாளிகள் 10 பேர் தங்களது தேசிய விருதுகளைத் திருப்பி அளித்தனர்.

தேசிய விருதுகளைத் திருப்பி அளித்த படைப்பாளிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், “நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கருத்துரிமையையும் காத்திடுவதற்கு உறுதியேற்க வேண்டியது இந்திய அரசின் உடனடி கடமையாகும்.

தேசத்தின் உயரிய இலக்கிய விருதைத் திருப்பி அளித்த படைப்பாளிகளின் வழியை நாங்களும் பின்பற்றி, எங்களது தேசிய விருதுகளைத் திருப்பித் தருகிறோம் என்று அறிவித்துள்ளனர்.

திரைப்படப் படைப்பாளிகளாக, திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பின்னால் உறுதியுடன் நின்று, அவர்களின் போராட்டச் சுமையை உறுதியுடன் கைவிடாமல் இருக்க துணை நிற்கிறோம். அவர்களது சரித்திரப் போராட்டங்களை முன்னெடுக்க துணைபுரிகிறோம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்திற்கான காரணம் என்ன?

சுயாட்சி அதிகாரம் கொண்ட இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டார். இவர் பி.ஆர். சோப்டா தயாரித்த ‘மகாபாரதம்’ நெடுந்தொடரில் தருமபுத்திரனாக நடித்தவர் என்றாலும், திரைப்படத் துறையின் எல்லாத் துறைகளிலும் அனுபவம் பெற்றவர் என்றோ நிபுணர் என்றோ பெயரெடுத்தவர் அல்ல.

தேசிய விருதுகள் திரும்ப ஒப்படைத்த படைப்பாளிகள்

தேசிய விருதுகள் திரும்ப ஒப்படைத்த படைப்பாளிகள்

இவர் மத்திய அரசை ஆளும் பாஜகவின் உறுப்பினர். சுயாட்சி அதிகாரம் உள்ள பதவிகளுக்குத் தலைவர்களை நியமிக்கும்போது, அத்துறையின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அவர்கள் எந்த அளவுக்கு உதவுவார்கள் என்று பரிசீலித்து, பொருத்தமானவர்களை நியமிப்பதுதான் முறை.

இதற்கு முன்னர் இந்தத் திரைப்படக் கல்லூரியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள் திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் சிறந்து விளங்கியவர்கள். அரசியல் சார்பு இருப்பது ஒரு குறையல்ல; ஆனால், அது மட்டுமே தகுதியாகிவிடக் கூடாது.  போராட்டம் வெடிக்கக் காரணமே இந்த பிரச்சினைதான்.

இந்த நிலையில்தான், திவாகர் பானர்ஜி, ஆனந்த பட்வர்தன், பரேஷ் கம்தார், நிஷிதா ஜெயின், கீர்த்தி நக்வா, ஹர்ஷவர்தன் குல்கர்னி, ஹரி நாயர், ராகேஷ் சர்மா, இந்திரநீல் லாஹ்ரி மற்றும் லிபிகா சிங் தாராய் ஆகிய படைப்பாளிகள் தங்கள் படங்களுக்காக பல்வேறு காலங்களில் பெற்ற தேசிய விருதுகளைத் திருப்பி அளித்து, இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துள்ளனர்.

திருப்பித் தந்த விருதுகளும் படைப்பாளிகளும்

  1. Dibakar Banejee – Khosla Ka Ghosla (2007),  Oye Lucky, Lucky Oye (2009)
  2. Anand Patwardhan – Bombay Our City (1984)
  3. Paresh Kamdar – Rasyatra (1995)
  4. Nishtha Jain – Gulaabi Gang (2014)
  5. Kirti Nakhwa – Lost & Found (2008)
  6. Harshavardhan Kulkarni – Lost & Found (2008)
  7. Hari Nair – Sham’s Vision (1997)
  8. Rakesh Sharma – Final Solution (2006)
  9. Indraneel Lahiri – Aamar Katha, Story of Binodhini (2014)
  10. Lipika Singh Darai – Gaarud (2009) , Eka Gachha Eka Mainsha Eka Samudra (a tree a man a sea) (2012) , Kankee O Saapo (dragonfly and snake) (2013)
Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in இந்தியா, சினிமா and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s