இந்த ஆண்டு150 புது ரக பட்டாசுகள் அறிமுகம் – தீபாவளி கொண்டாட்டம்

பட்டாசுக் கடை

பட்டாசுக் கடை

தீபாவளிக்கு பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்கள் உள்ள நிலையில் சென்னை பாரீஸ் ஆன்டர்சன் தெரு, பந்தர் தெரு ஆகியவற்றில் உள்ள பட்டாசு மொத்த விற்பனையகங்கள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 500 வகை பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 150 ரகங்கள் புது வரவாக உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 15 சதவீதம் வரை பட்டாசுகளின் விலை உயர்ந்துள்ளன. சில்லறை விலையில் பட்டாசு விற்பனைக்காக தீவுத் திடல், அண்ணாநகர், கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் என மூன்று இடங்களிலும் விற்பனை அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு சுமார் 100 வகையான வான வேடிக்கை நிகழ்த்தும் பட்டாசுகள் புதிதாக வந்துள்ளன. பனோரமா என்ற பட்டாசு தொடர்ந்து 500 முறை வானில் சென்று வெடித்து, வெவ்வேறு வண்ணங்களை கொடுக்கும். மேலும் புல்லட் புறப்படுவது போன்ற ஒலியெழுப்பியவாறு வானில் சென்று வெடிக்கும் ‘புல்லட் டிரெயின்’ பட்டாசு, குருவி கத்துவது போன்ற ஒலியெழுப்பும் ‘சிங்கிங் பேர்டு’ பட்டாசு உள்ளிட்ட 150 ரகங்கள் புது வரவாக வந்துள்ளன.

குழந்தைகளுக்கென, கையில் நெருப்பு படாத வகையிலான நீண்ட குச்சியை கொண்ட மத்தாப்பு, ஐந்து வண்ணங்களில் எரியும் மத்தாப்பு, வெவ்வேறு வண்ணங்களில் அணைந்து, அணைந்து எரியும் ‘டிஸ்கோ பிளாஷ்’ பட்டாசு, மினி பூந்தோட்டி ஆகியவை புது வரவாக வந்துள்ளன.

இந்த ஆண்டு வெடிகள் அடங்கிய பெட்டி ரகத்துக்கேற்ப ரூ.15 முதல் ரூ.310 வரையும், ராக்கெட்டுகள் ரூ.63 முதல் ரூ.500 வரையும், பூந்தொட்டிகள் ரூ.55 முதல் ரூ.405 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. 16 வகை பட்டாசுகள் அடங்கிய பரிசு பெட்டி ரூ.420-க்கும், 21 ரகங்கள் கொண்டது ரூ.650-க்கும், 28 ரகங்கள் கொண்டது ரூ.730-க்கும், 31 ரகங்கள் கொண்டது ரூ.900-க்கும், 50 ரகங்கள் கொண்டது ரூ.3250-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in சென்னை, செய்திகள், தமிழ்நாடு and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s