யார் அந்த கீதா? – பாகிஸ்தானின் வளர்ப்பு மகள்!

கீதா

கீதா

இந்தியாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 8 வயதாக இருக்கும் போது, தவறுதலாக பாகிஸ்தானுக் குள் சென்று, லாகூர் ரயில் நிலை யத்தில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்தார். அவரை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், காவல் நிலையத்தில் ஒப்படைத்த னர்.பாகிஸ்தானிலுள்ள எதி அறக்கட்டளை சிறுமியை பாதுகாத்து வளர்த்தது.

வாய் பேச முடியாத, காது கேட்காத அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்த அறக்கட்டளை நிர்வாகி பில்கிஸ் எதி அவருக்கு கீதா என்று பெயர் வைத்தார்.
கீதாவின் இந்தியா முகவரியை கேட்டபோது அவர் திரும்பத் திரும்ப 193 என்ற எண்ணை எழுதியுள்ளார். இந்திய வரைபடத்தில் தெலுங்கானா மற்றும் ஜார்க்கண்டை காண்பித்து தனது பெற்றோர் அங்கிருப்பதாக கூறியுள்ளார். பின்னர் தான் பீகாரை காண்பித்துள்ளார். இந்தியாவில் தனக்கு 7 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கீதா

கீதா எதி அறக்கட்டளை நிர்வாகிகளுடன்

கீதா பாகிஸ்தானில் தான் தங்கியிருந்த அறையில் இந்து கடவுள்களின் புகைப்படங்கள், சிறிய மேஜையில் காத்மாண்டுவில் இருந்து வரவழைக்கப்பட்ட விநாயகர் சிலை ஆகியவற்றை வைத்து வணங்கியுள்ளார்.
கீதா தொழுகை செய்ததுடன், புனித ரமலான் மாதத்தில் நோன்பும் வைத்துள்ளார். அவரை யாரும் இஸ்லாத்திற்கு மாற்ற முயற்சிக்கவில்லை என்று எதி தெரிவித்துள்ளார்.
கீதா சைவப் பிரியை. வாய் பேச முடியாவிட்டாலும் அவர் தான் கூற விரும்புவதை இந்தியில் எழுதி காண்பித்து வந்துள்ளார்.
கீதாவின் இந்தியா முகவரியை கேட்டபோது அவர் திரும்பத் திரும்ப 193 என்ற எண்ணை எழுதியுள்ளார். இந்திய வரைபடத்தில் தெலுங்கானா மற்றும் ஜார்க்கண்டை காண்பித்து தனது பெற்றோர் அங்கிருப்பதாக கூறியுள்ளார். பின்னர் தான் பீகாரை காண்பித்துள்ளார். இந்தியாவில் தனக்கு 7 சகோதரர்கள் மற்றும் 4 சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருநாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களின் முயற்சியால் கீதாவின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பிஹாரில் உள்ளனர். தற்போது 23 வயதாகும் கீதா நேற்று இந்தியா அழைத்து வரப் பட்டார். கராச்சியிலிருந்து விமானம் மூலம் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்த அவரை இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி கள் பூங்கொத்து கொடுத்து வர வேற்றனர். கீதாவுடன் எதி அறக்கட்டளை யைச் சேர்ந்த 5 பேர் இந்தியா வந்துள்ளனர்.

ரூ.1 கோடி உதவி பாகிஸ்தானில் கீதாவை இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த எதி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானைப் பற்றி இங்குள்ள ஊடகங்கள் எப்போதும் நிறைய தவறான செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருவதை நாம் அடிக்கடி பார்க்கின்றோம். ஆனால் ஒரு 8 வயது வாய் பேச முடியாத சிறுமி ராணுவத்தால் பிடிக்கப்பட்டு பத்திரமாக காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு அவளை ஒரு தொண்டு நிறுவனம் மூலம் வளர்த்தெடுத்து அனுப்பியுள்ளனர் இந்தியாவிற்கு என்ற செய்தி ஒரு பெண்ணின் பாதுகாப்பை அந்த ராணுவமும், காவல்துறையும் உறுதி செய்துள்ளதை காட்டுகிறது. அவர்களை பாராட்டுவோம். இங்குள்ள  ராணுவ, காவல்துறையினர் சிலர் பெண்களை எப்படி நடத்துகின்றனர் என்பதை நினைத்தால் அவர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்கள். இந்திய ஊடகங்கள் இதை ஒப்பீடு செய்வதில்லை. காரணம், அவர்களிடம் ஒரு துவேசம் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கீதா

கீதா

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in இந்தியா and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s