முன்னாள் ராணுவ வீரர்களின் இரத்தக் கையழுத்துடன் பிரதமர் மோடிக்கு மனு!

ஒரே பதவி வகித்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் திட்டம் ஜூலை 1 2014 முதல் கணக்கிட்டு செயல்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் அறிவித்தார்.

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்

முன்னாள் இராணுவத்தினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்

ஆனால், அத்திட்டம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 100 பேர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ரத்தத்தால் கையெழுத்திட்ட மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப தயாராகியுள்ளனர்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் குழுமிய யுனைடட் பிரன்ட் ஆஃப் எக்ஸ் சர்வீஸ்மேன் மூவ்மென்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை தயாரித்து கையெழுத்திட்டனர்.

மேலும் இந்த அமைப்பின் தலைவர் சத்பீர் சிங், “ஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயங்குகிறதோ என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

நாட்டுக்காக இரத்தம் சிந்திய ராணுவ வீரர்களை இரத்தம் சிந்தி கோரிக்கை வைத்தாலும் பணிய மறுக்கிறது மோடி அரசு. ராணுவ வீரர்கள் நாட்டுக்காக இரத்தம் சிந்தியவர்கள். அவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் ஒவ்வொரு சொட்டு இரத்தத்திற்கும் இந்த அரசு பதில் சொல்ல வேண்டும் என்று சமூக ஆரவலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in இந்தியா and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s