இலங்கையில் இரண்டு இந்துக் கோயில்கள் இடிப்பு! – எதிர்ப்பு தெரிவிக்காத இந்து அமைப்புகள்!

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இந்துக் கோவில்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சிலைகளும் உடமைகளும் வீதியில் வீசப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் கிருஷ்ணன் கோவில், மட்டக்களப்பு – பொலநறுவை நெடுஞ்சாலையிலுள்ள வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களின் மீதே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

வாகனேரி இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் சில மாதங்களுக்கு முன்னரும் இதுபோன்ற தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளுர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குருக்கள்மடம் கிருஸ்ணன் கோவில் மீது தாக்குதல் நடத்திய நபர்களினால் அங்கிருந்த நவக்கிரகங்கள் உட்பட 13 விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு வீதியில் வீசப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள போதிலும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

குறித்த ஆலயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இத்தியடி வழிப் பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல் இனவாதத்தின் வெளிபாடு என்று கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் கே. துரைராஜ சிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

பௌத்தமத அடிப்படைவாதிகள் தான் இதுபோன்ற செயல்களை செய்துவருவதாக இலங்கை மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருக்கும் இந்துத்துவ அடிப்படைவாதிகள் இவற்றை சட்டை செய்வதில்லை என்றும் அவர்கள் முஸ்லிம்களை குறிவைத்தே அரசியல் செய்து வருகின்றனர் என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in உலக ச் செய்தி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s