பருப்பு வகைகள் இரண்டு மாதங்களில் இருமடங்காக விலையேற்றம்!

இரண்டு மாதங்களுக்கு முன்

துவரம் பருப்பு 1 கி.கி- ரூ. 110  தற்போது ரூ. 210

உளுந்து 1 கி.கி – ரூ. 90 தற்போது ரூ.190

பயிறு வகைகள் ரூ.50 தற்போது ரூ.130

கடலை பருப்பு உள்ளிட்ட அனைத்து வகைப் பருப்புகளும் கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பருப்பு

பருப்பு

மேலும், எண்ணெய் வகைகளும் மற்ற பொருட்களின் வகைகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வரும் தீபாவளிப் பண்டிகைக் காலங்களில் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தினசரி சமையலும் இதனால் பெரிதும் சிக்கலுக்குள்ளாகுவதாக பொது மக்கள் கூறுகின்றனர். 25 ஆண்டுகளில் இது போன்ற விலையேற்றம் கண்டதில்லை என்று மக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

பர்மாவில் இருந்து தான் பருப்பு 50 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கு விளைச்சல் குறைந்ததால் தான் இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் வட மாநிலங்களின் பருப்பு விளைச்சல் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வந்துவிட்டால் இந்த விலையேற்றம் குறையும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால், மத்திய அரசாங்கம் இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று சாமானிய மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகள்தான் பருப்பு மற்றும் எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.ஆர்.சிவசாமி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆன்லைன் வர்த்தகம் காரணமாக உணவுப் பொருட்கள் பதுக்கலும் அதிகரித்துள்ளது. இவற்றுக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யும்பட்சத்தில், அரசே நேரிடையாக இறக்குமதி செய்ய வேண்டும். அதைவிடுத்து தனியாரும் இறக்குமதி செய்யலாம் என அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதித்தால் விலை உயர்வு குறையாது என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர். திரு. சிவசாமி தெரிவித்துள்ளார்.

Advertisements

About Sudhanthiran

பார்வைகள் பலவிதம்! புரிதலும் பலவிதம்! நமது பார்வையில் உங்கள் சிந்தனைக்கு... செய்திகள் சொல்வோம்!
This entry was posted in செய்திகள் and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s